AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று வெளியாகும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது? முழு விவரம்..

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக, வாட்ஸ்அப் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் வகுப்பு விவரம் உள்ளிட்டவற்றை 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினால், முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 May 2026 07:31 AM IST

சென்னை, மே 8, 2026: தமிழ்நாட்டில் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றன. சரியாக மார்ச் 2, 2026 முதல் மார்ச் 26, 2026 வரை இந்த தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர்.

திட்டமிட்டப்படி வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்:

தேர்வை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இன்று திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல்வேறு காரணங்களால் இது தள்ளிப் போகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: படிப்படியாக குறையும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டிருந்தார். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் எப்படி பார்ப்பது?

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக, வாட்ஸ்அப் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் வகுப்பு விவரம் உள்ளிட்டவற்றை 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினால், முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாணவர்களே தயாரா? அரசு கலை கல்லூரிகளில் சேர மே 29 வரை வாய்ப்பு: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதள விவரம்:

தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us