AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளியானது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி..

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று சரியாக காலை 9.30 மணிக்கு இந்த பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன.  தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.dislocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வெளியானது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 08 May 2026 09:48 AM IST

மே 8, 2026: தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று சரியாக காலை 9.30 மணிக்கு இந்த பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன.  தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.dislocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  தமிழகத்தில் மார்ச் 2, 2026 முதல் மார்ச் 26, 2026 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர்.

தேர்வை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த தேர்வு முடிவுகள் இன்று திட்டமிட்டபடி வெளியிடப்பட்டுள்ளன.

திட்டமிட்டப்படி வெளியான தேர்வு முடிவுகள்:

முன்னதாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை ஆட்சி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசியல் நகர்வுகள் உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றன. இந்த சூழலில், தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், நேற்றைய தினம் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

முடிவுகளை தெரிந்துக்கொள்ள எளிய வழிகள்:

இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டிருந்தார். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் வகுப்பு விவரம் உள்ளிட்டவற்றை 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினால், முடிவுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு முடிவு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 14417, 104 மற்றும் 14416 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிக வட்டி தருவதாகக் கூறி கைவரிசை.. 800க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி.. தலைமறைவான பெண் கைது!!

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்த்து உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை  tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.dislocker.gov.in  ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி:

இந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆகும். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவியர்கள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட 3.81% அதிகமாக மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விகிதம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us