Tamil Nadu Plus 2 Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை எப்போது, எப்படி பெறலாம்.. இதோ வழிமுறை!!
Tamil Nadu 12th class Result: மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பல்வேறு வழிகளில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் தங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளயானது. அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டபடி முடிவுகளைத் தனது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2, 2026 அன்று தொடங்கி, மார்ச் 26, 2026 வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து, ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: வெளியானது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி..
முடிவுகளைப் பார்க்கும் வழிமுறைகள்:
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பல்வேறு வழிகளில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் தங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி பின்வரும் இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in
வாட்ஸ்அப் மூலம்:
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியின்படி, மாணவர்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் முடிவுகளைப் பெறலாம். 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் பதிவு எண் மற்றும் வகுப்பு விவரங்களைச் செய்தி அனுப்பினால், உங்கள் மதிப்பெண் பட்டியல் உடனே உங்களுக்கு அனுப்பப்படும்.
குறுஞ்செய்தி மூலம்:
மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ள அவர்களது செல்போன் எண்களுக்குத் தேர்வு முடிவுகள் தானாகவே குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர்கல்விக்கான சேர்க்கை நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் மே 29-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
இதனிடையே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 13ம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் இணையதளத்தில் வழியாகவும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி?
அதன்படி, https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் Notification என இருப்பதை கிளிக் செய்யவும். அதனைத்தொடர்ந்து, Provisional Certificate என்று இருப்பதை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஒரு பக்கம் திறக்கும். அதில் மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
மேலும், Captcha உள்ளிட வேண்டும். மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/ மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். அதனை சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் TV9 தமிழ் சார்பாக வாழ்த்துகள்!