AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை விவகாரம்.. தமிழக சட்டப்பேரவையில் நாளை தனித்தீர்மானம்.. முதல்வர் விஜய் அதிரடி!

Mekedatu Dam Scheme: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பரேவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேகதாது அணை விவகாரம்.. தமிழக சட்டப்பேரவையில் நாளை தனித்தீர்மானம்.. முதல்வர் விஜய் அதிரடி!
மேகதாது அணை விவகாரத்தில் தனி தீர்மானம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 18 Jun 2026 20:45 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் இன்று வியாழக்கிழமை தொடங்கியது. இதை தொடர்ந்து, மூன்று நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அந்த மாநில அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை ( ஜூன் 19) காலை 9:30 மணிக்கு கூட உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் ஜோசப் விஜய் இந்த சிறப்பு தீர்மானத்தை முன் மொழிய உள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறையிடம் அனுமதி கோரி கர்நாடகா அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க: ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை… தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்!

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

இதன் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய நிலையில், மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்காக கர்நாடகா அரசு பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறாக மேகதாது அணை விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் மேகதாது அணை திட்டம் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கே அதிக பயன் தரும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடன் பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆளுநர் உரையில் தவெக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இல்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!

Follow Us