மின்வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், முன்பு மின்துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, மே 21 : தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாடு மின்சாரவாரியம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. முன்பு மின்துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பல டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மின் வாரியத்தில் தவறுகள் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மின்வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன்
மேலும் பேசிய அவர் மக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார். சென்னையின் சில பகுதிகளில் மே 20, 2026 நேற்றிரவு மன் தடை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது.
இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!




மேலும் பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட மின் வெட்டு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போதுபேசிய அவர், சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 160க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டதால் மின் வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மன் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தமிழ்நாட்டில் சோலார பேனல் கொள்முதல் விஷயத்திலும் விதிமுறை மீறல் நடந்துள்ளது. மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிக்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் 3- ஆம் இடம்.. முதல்வர் விஜய் கருத்தை விளக்கிய பெ.சண்முகம்!
மேலும் மின் தடை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கிட்டத்தட்ட 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். மேலும் டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது என தெரிவித்தார்.
இதற்கிடையில் தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் மே 21, 2026 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் உட்பட 23 எம்எல்ஏகள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதில் 7 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.