சதுரகிரியில் மளமளவென பரவும் காட்டுத்தீ – பக்தர்கள் மலையேற தடை
விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், மலையில் காட்டுத்தீ பரவி வருவதன் காரணமாக ஆகஸ்ட் 11, 2026 இன்று மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
விருதுநகர், ஆகஸ்ட் 11 : விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், மலையில் காட்டுத்தீ பரவி வருவதன் காரணமாக ஆகஸ்ட் 11, 2026 இன்று மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா வெகு விமர்சையாக நடைபெறும் இதனையடுத்து 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
சதுரகிரியில் பக்தர்கள் மலையேற தடை
இதன் ஒரு பகுதியாக இந்த 2026 ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் ஆகஸ்ட் 10, 2026 நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் தொடர்ச்சியாக ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷத்தையொட்டி நேற்று முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமாக காலை 10 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் நிலையில், அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்ததால் 2 மணி நேரம் கூடுதலாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிக்க : ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!




இந்த நிலையில் ஆகஸ்ட் 10, 2026 நேற்று இரவு சதுரகிரி மலையில் காட்டுத் தீ பற்றி எரிந்ததன் காரணமாக பக்தர்களை அடிவாரத்திற்கு செல்ல உத்தரவிட்டனர். மேலும் தீ பரவியதன் காரணமாக ஆகஸ்ட் 11, 2026 இன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 12, 2026 நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு காட்டுத்தீயை பொறுத்து அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் வனத்துறையினரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். காட்டுத்தீயை பொறுத்து மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
மாலை 4 மணிக்குள் அடிவாரம் நோக்கி திரும்பிச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் சதுரகிரி மலையில் தீ பற்றி எரிந்ததால் பக்தர்களை பத்திரமாக அடிவாரத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டது. மேலும் தீ பரவி வருவதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை ஆடி அமாவாசை தினத்தில் மகாலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் என காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர் – அசாம் காவல்துறை பாராட்டு
முன்னதாக தேனி மாவட்டம் உப்புத்துறை கருப்பசாமி கோயில் வழியாகவும் மலைப்பாதை உள்ளது. இதன் வழியே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அந்த பகுதியிலும் தற்போது காட்டுப்பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.