மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு!

Women Vidiyal Bus Travel Scheme: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தில் தொடர்ந்து பயன் பெறும் வகையில் ரூ.4 ஆயிரம கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார்.

மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு... தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு!

மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Updated On: 

17 Feb 2026 14:17 PM

 IST

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று செவ்வாய்க்கிழமை காலை ( பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தற்போது வரை மகளிருக்கான விடியல் பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான பெண்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.4000 கோடி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது.

கிராம சாலை திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ஒதுக்கீடு

வரும் காலங்களில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்காகவும், பெண்கள் தொடர்ந்து இலவச பேருந்து பயண சேவையை பெறவும் இந்த நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கிராம சாலைத் திட்டத்திற்கு ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான முக்கிய திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெறும் என்று பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: Tamil Nadu Interim Budget Reaction: இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்… பட்ஜெட்டை குறிப்பிட்டு அவர் கூறிய வார்த்தை!

மகளிர் விடியல் பேருந்து பயண திட்டம்

அதன்படி, பெண்களுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதியை தங்கம் தென்னரசு அறிவித்தார். இதில், முக்கிய திட்டங்களில் ஒன்றான மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். இது, தினந்தோறும் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு பெரும் வசதியாக இருக்கும். இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

மகளிர் விடியல் பேருந்து பயணத்தில் 881 கோடி முறை பயணம்

இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 881 கோடி முறை பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் மகளிர் பேருந்து பயண கட்டணத்தில் ரூ.888 வரை சேமித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகைய திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய அளவில் சராசரியை விட குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!