AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி.. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதில்..

தற்போது ரஜினிகாந்த், ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இது ரஜினிகாந்த் மீது செய்யப்படும் விமர்சனம் அல்ல. ஆனால் திமுகவிற்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால், அவருக்கு மனவலிமை அதிகம். கரூர் சம்பவத்திற்குப் பிறகும் நாங்கள் வெளியே வந்து போராட்டம் நடத்திவிட்டோம் என்றார்.

பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி.. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதில்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Mar 2026 20:29 PM IST

மார்ச் 12, 2026: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாக கூறி, மாவட்ட தலைநகரங்களில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியலுக்கு வர நினைத்த மிகப் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். அவர் அரசியலில் நுழைந்து அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என எண்ணினார். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது, திமுக தரப்பில் இருந்து பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா சொன்னது:

தற்போது ரஜினிகாந்த், ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இது ரஜினிகாந்த் மீது செய்யப்படும் விமர்சனம் அல்ல. ஆனால் திமுகவிற்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால், அவருக்கு மனவலிமை அதிகம். கரூர் சம்பவத்திற்குப் பிறகும் நாங்கள் வெளியே வந்து போராட்டம் நடத்திவிட்டோம் என்றார்.

தனிப்பட்ட விமர்சனங்களை வைத்து தற்போது விஜய் அமைதியாக வீட்டில் அமரவில்லை. மகளிர் நலனை முன்னிறுத்தி பெண்களுக்கான 12 வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார் எனவும் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.

மிரட்டலுக்கு அஞ்சும் மனிதர் ரஜினி இல்லை:

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு காரணம் திமுக என்று வேலூர் மாவட்ட செயலாளர் கூறியிருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவர் பதிலளித்தார். ரஜினிகாந்த் மிரட்டலுக்கு அஞ்சும் மனிதர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

மேலும் படிக்க: ‘ரஜினிகாந்த்திற்கு திமுக மிரட்டல் விடுத்தது… விஜய்க்கு மனவலிமை அதிகம் – ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் சர்ச்சை

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காலத்தில், கூட்டங்களை நடத்தினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு, உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் தான் ரஜினிகாந்த் அரசியலிலிருந்து விலகினார். அது யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சிய முடிவு அல்ல என்றார்.

பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி:

தன்னை நம்பி வரும் மக்களின் உயிர்களை பலியிடும் அர்ப்ப அரசியலை ரஜினிகாந்த் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவராகிவிட முடியாது. தனது அரசியல் நிலைப்பாடுகள் விமர்சனங்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும், அவற்றை தாங்கிக் கொண்டு மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் அளித்தவர் ரஜினிகாந்த் என்றார்.

இதுவே அவரின் உண்மையான மனவலிமை. அதனால் தான் அவர் ரசிகர்களால் “நிரந்தர தலைவர்” என போற்றப்படுகிறார். “பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” என குறிப்பிட்டு அவர் தனது உரையை முடித்தார்.

Follow Us