முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா.. ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு!
சர்வதேச செஸ் தொடரில் தான் வென்ற கோப்பையை முதலமைச்சரிடம் காட்டியதாகவும், அவர் அடுத்தடுத்து வரவிருக்கும் போட்டிகள் குறித்துத் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் பிரக்ஞானந்தா தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அரசிடம் தான் எந்தவொரு கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும், ஆயினும் முதலமைச்சர் தனக்கு ரூ.50 லட்சம் கேஷ் இன்சென்டிவ் வழங்கி கௌரவித்ததாகவும் கூறினார்.
சென்னை, ஜுன் 08: நார்வே செஸ் தொடரை முடித்துவிட்டுத் தாயகம் திரும்பிய உலகப் புகழ்பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் விஜய் தனக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசை ஊக்கத்தொகையாக வழங்கியதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரைச் சந்தித்த பிறகு தலைமைச்செயலகத்தில் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு.. சிபிசிஐடி-க்கு மாற்றி அதிரடி உத்தரவு!
எதிர்பாராத ஆச்சரியம்:
முதலமைச்சர் விஜய் தன்னைச் சந்திப்பதற்காக அழைத்திருந்ததாகவும், அந்தச் சந்திப்பின் போது ஒரு சர்ப்ரைஸான தருணம் அமைந்தது என்றும் பிரக்ஞானந்தா குறிப்பிட்டார். “நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சர் சாரே செஸ் போர்டை எடுத்து வரச் சொல்லி, அங்கிருந்த மேஜையிலேயே காய்களை அடுக்கிக் கேம் விளையாடலாம் என்று கூறினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சுமார் 15 நிமிடங்கள் செஸ் விளையாடினோம். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது.” என்றார்.
முதல்வர் நன்றாகச் செஸ் விளையாடுகிறார்:
முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடுவார் என்று தான் கேள்விப்பட்டிருந்ததாகக் கூறிய பிரக்ஞானந்தா, அவர் விளையாடிய விதம் குறித்துப் பாராட்டினார். “சார் நிஜமாகவே மிக நன்றாகச் செஸ் விளையாடினார். நான் அவரிடம் எப்போதெல்லாம் விளையாடுவீர்கள் என்று கேட்டதற்கு, தனது நண்பர்களுடன் விளையாடுவதாகக் கூறினார். இந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன், இருந்தாலும் அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு… pic.twitter.com/xkJ92gsDZ8
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 8, 2026
சர்வதேச செஸ் தொடரில் தான் வென்ற கோப்பையை முதலமைச்சரிடம் காட்டியதாகவும், அவர் அடுத்தடுத்து வரவிருக்கும் போட்டிகள் குறித்துத் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் பிரக்ஞானந்தா தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அரசிடம் தான் எந்தவொரு கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும், ஆயினும் முதலமைச்சர் தனக்கு ரூ.50 லட்சம் கேஷ் இன்சென்டிவ் வழங்கி கௌரவித்ததாகவும், இது தனக்கு நல்லதொரு ஊக்கமாக இருக்கும் என்றும் கூறினார்.
நார்வே தொடர் முடிவு:
#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay meets Indian Grandmaster R Praggnanandhaa and awards him Rs 50 lakh on behalf of the Sports Development Authority of Tamil Nadu after the chess player won the Norway Chess 2026 title.
(Source: TNDIPR) pic.twitter.com/Lf4dNgYrEX
— ANI (@ANI) June 8, 2026
நார்வே செஸ் தொடரின் முதல் பாதியில் ஆட்டங்களின் தரம் நன்றாக இருந்தபோதிலும் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கவில்லை என்றும், ஆனால் தங்களின் கடின உழைப்பிற்குப் பலனாகப் போட்டியின் இரண்டாம் பாதியில் சிறப்பான முடிவுகள் கிடைக்கத் தொடங்கியதாகவும் அவர் விவரித்தார்.
இதையும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!
தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கும், குறிப்பாகச் செஸ் விளையாட்டுக்கும் ‘எலைட் ஸ்கீம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு மற்றும் எஸ்டிஏடி (SDAT) தரப்பிலிருந்து மிகச் சிறந்த ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்து வருவதாகப் பிரக்ஞானந்தா நன்றியுடன் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.