அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி? ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஜூன் 24, 2026 இன்று தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர். இதனையடசுத்து இருவரிடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது .
சென்னை, ஜூன் 24 : கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஜூன் 24, 2026 இன்று தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர். இதனையடசுத்து இருவரிடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கட்சியில் இருவரும் தனித்தனி குழுவுடன் செயல்பட்டு வந்தனர். இருவரும் தங்களுக்கு தான் கட்சி சொந்தம் என கூறி வந்தனர்.
அந்த வகையில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் களம் கண்டார். மற்றொரு பக்கம் ராமதாஸ், சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியுடன் தேர்தளை சந்தித்தார். இந்த நிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சி சின்னத்தை மீட்க ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை.




இதையும் படிக்க : கோவையில் அதிர்ச்சி ; அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு – போலீஸார் தீவிர விசாரணை
ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
Tailapuram, Tamil Nadu: PMK leader Anbumani Ramadoss visited his father and PMK leader S. Ramadoss, at Thailapuram Garden with his family on the couple’s 61st wedding anniversary. pic.twitter.com/OEAMKcpnWl
— IANS (@ians_india) June 24, 2026
இதனைத் தொடர்ந்து அன்புமணி தரப்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்து, சட்டமன்ற தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் தர்மபுரி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயம்கொண்டம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க : “திமுகவின் சரிவு தற்காலிகமானது”.. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூடிய சென்னை மாமன்றம்.. தவெக அரசை சாடிய மேயர் பிரியா!!
மற்றொரு பக்கம் சசிகலாவுடன் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த ராமதாஸ் 234 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அன்புமணி தரப்பில் 4 தொகுதிகளில் வென்ற நிலையில் கட்சியில் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமகவுக்கு ஆதரவுள்ள தொகுதிகளில் தவெகவால் வெற்றி பெற முடியவில்லை. இது அவருக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில் தான் அன்புமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின் ராமதாஸ் எடுத்த அரசியல் நகர்வுகளும் தோல்வியடைந்த நிலையில், அவருடன் இருந்த ஆதரவாளர்கள் தற்போது அன்புமணி தரப்புக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்து பேசியுள்ளார். ராமதாஸின் திருமண நாள் என்பதால் அவரிடம் ஆசி பெற சென்ற தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை மகன் உறவில் தற்போது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.