AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் அதிர்ச்சி ; அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு – போலீஸார் தீவிர விசாரணை

கோவை புதூர் பகுதியில் ஜூன் 24, 2026 இன்று காலை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாண கோலத்தில் கிடந்து உள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கோவையில் அதிர்ச்சி ; அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு – போலீஸார் தீவிர விசாரணை
மாதிரி புகைப்படம்
Sekaran S
Sekaran S | Updated On: 24 Jun 2026 12:53 PM IST

கோவை, ஜூன் 24 : கோவை புதூர் பகுதியில் ஜூன் 24, 2026 இன்று காலை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை புதூர் சி.பி.எம் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதாக உள்ளூர் மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, குனியமுத்தூர் போலீஸார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு (Crime Scene) விரைந்து வந்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடத்தில் சடலமாகக் கிடந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்து உள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

​முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற எந்தவொரு தகவலும் போலீஸாருக்கு இன்னும் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, தடையங்களை மறைப்பதற்காகக் கொலை செய்து விட்டு உடலை இங்கே வீசிச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த விபரீதம் அரங்கேறியதா? என்ற கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்துப் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். பெண்ணின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக (Autopsy) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது; மருத்துவ அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Follow Us