AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

401 பேருக்குப் பணி ஆணை.. நிறைமாத கர்ப்பிணிக்காக முதல்வர் விஜய் செய்த செயல்.. நெகிழ வைக்கும் வீடியோ!!

நாளை இந்த உலகிற்கு வரவிருக்கும் புத்தம் புதிய உயிரின் பாதுகாப்பிற்கும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் கரம் கொடுத்து, சாதனையின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என விழா மேடையில் நெகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டது.

401 பேருக்குப் பணி ஆணை.. நிறைமாத கர்ப்பிணிக்காக முதல்வர் விஜய் செய்த செயல்.. நெகிழ வைக்கும் வீடியோ!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jun 2026 11:36 AM IST

சென்னை, ஜுன் 24: தமிழக அரசுத் துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 401 மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் பிரம்மாண்ட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நெறிமுறைகளைத் தளர்த்தி நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்காக நேரில் கீழே இறங்கிச் சென்று பணி ஆணை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கை நெகிழ வைத்துள்ளது. அரசுப் பணி நியமன ஆணை பெறும் 401 பயனாளிகளில் ஒருவராக அட்சயலட்சுமி என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் விழாவிற்கு வருகை தந்திருந்தார். இவருக்கு இன்னும் மூன்று நாட்களில், அதாவது ஜூன் 28-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : கத்தார் ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு..

மேடையை விட்டு இறங்கிச் சென்ற முதல்வர்:

தன் வாழ்நாளின் மிக முக்கியக் கனவான அரசுப் பணி ஆணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கில், தனது பிரசவக் கால உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர் விழாவிற்கு வந்திருந்தார். பயனாளிகள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு வந்த நிலையில், அட்சயலட்சுமியின் உடல்நிலையைக் கவனித்த முதலமைச்சர் விஜய் அவர்கள், அவரை மேடானப் படிகளில் ஏறி வர வைக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மேடை மரபுகளைத் தளர்த்தி அவரே மேடையில் இருந்து கீழே இறங்கி, அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்திற்கே நேரடியாகச் சென்றார். அங்கு நெகிழ்ச்சியுடன் நின்றுகொண்டிருந்த அட்சயலட்சுமிக்கு, முதல்வர் விஜய் தனது கரங்களால் பணி நியமன ஆணையை வழங்கி, அவரது எதிர்கால வாழ்விற்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பெண்களின் சாதனைகளுக்குத் துணை நிற்கும் அரசு:

நாளை இந்த உலகிற்கு வரவிருக்கும் புத்தம் புதிய உயிரின் பாதுகாப்பிற்கும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் கரம் கொடுத்து, சாதனையின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என விழா மேடையில் நெகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டது.

401 பேருக்குப் பணி ஆணைகள்:

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற லோகராஜன், பூமுகை, மார்டின், ஜெனிபா ஷெரின், அருண்குமார், பரத் வருண், கதீஜா பர்வீன், உஷா, சுகன்யா உள்ளிட்ட மொத்தம் 401 பயனாளிகளுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : வார இறுதி நாட்கள், மொஹரம் பண்டிகை.. 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

முதல்வரின் இந்த எளிய, கனிவான செயல் அங்கிருந்த அரசு அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Follow Us