AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்’ – தந்தையர் தினத்துக்கு உருக்கமாக பதிவிட்ட அன்புமணி!

Anbumani Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு, அன்புமணி ராமதாஸ்   எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான் என பதிவிட்டுள்ளார்.

‘தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்’ –  தந்தையர் தினத்துக்கு உருக்கமாக பதிவிட்ட அன்புமணி!
அன்புமணி - ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Jun 2025 11:19 AM IST

சென்னை, ஜூன் 15 :  பாட்டாளி மக்கள் கட்சியில் (PMK Internal Issues) ராமதாஸ் அன்புமணி (Ramadoss vs Anbumani) இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு, அன்புமணி ராமதாஸ்   எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதன்படி, ”தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம். தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது  தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே பல மாதங்களாக மோல் நீடித்து வருகிறது. குறிப்பாக பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கியதில் இருந்தே அன்புமணிக்கும் அவருக்கும் மோதல் வெடித்தது. 

பாமகவில் உட்கட்சி பிரச்னை

மேலும்,  2024  மக்களவை தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பினார். ஆனால், அன்புமணிக்கு அவரது மனைவி சௌமியா அன்புமணியும்  பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பினர். கடைசியில் அன்புமணியின் அழுத்தத்தின் காரணமாக,  பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக கூறப்படுகிறது. 

இதனால், ராமதாசுக்கும், அன்புமணிக்கு மோதல் பயங்கரமாக வெடித்தது. இதனை அடுத்து, தான் தான் பாமகவின் தலைவர், நிறுவனர் என ராமதாஸ் அதிரடியாக அறிவித்தது உட்கட்சி பிரச்னையை தீவிரமாக்கியது. சமீப நாட்களில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அதாவது, அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை எனவும் நிர்வாகம் திறன் இல்லை எனவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதோடு, தந்தை, தாயை மதிக்கத் தெரியாதவர் எனவும் தாய் மீது பாட்டிலை எடுத்து அடிப்பதாகவும், தன் மீது மைக்கை தூக்கி அடிப்பதாகவும் ராமதாஸ் குற்றச்சாட்டினார். மேலும், தந்தை தாயை மதிக்கனும் என்று கூறினாலே அன்புமணிக்கு கோபப்படுவதாகவும் ராமதாஸ் கூறினார்.

அன்புமணி ட்வீட் 

முடிவுக்கு வருமா மோதல்?

இப்படியான சூழலில்,  தந்தையர் தினத்தையொட்டி, அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில்,  தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம்  தந்தை, மகனுக்கு இடையே பிரச்னை முடிவுக்கு வருவதாக தெரிகிறது.  ஆனால், ராமதாஸ்  எங்கள் இருவருக்குமான பிரச்னை டிராவில் இருப்பதாக கூறியுள்ளார். அண்மையில், இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு எட்டவில்லை. இதனால், இவருக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us