AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

”அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது .. மன உளைச்சல் தான்” மனம் நொந்து புலம்பிய ராமதாஸ்!

Anbumani VS Ramadoss : அன்புமணியை பார்த்தாலே தனக்கு பிபி ஏறுவதாகவும், மன உளைச்சல் ஏற்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், அவரை நினைத்தாலே மனக்குமுறல், வேதானைதான் வருகிறது. தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை என்று ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

”அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது .. மன உளைச்சல் தான்” மனம் நொந்து புலம்பிய ராமதாஸ்!
அன்புமணி - ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Jun 2025 12:28 PM IST

சென்னை, ஜூன் 13 : என் மூச்சு இருக்கும்  வரை நானே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் என்றும் அன்புமணிக்கு (Anbumani) பதவி கிடையாது எனறும்  ராமதாஸ் (Ramadoss) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி  பிரச்னை (PMK Internal Issues) நிலவி வரும் நிலையில், இதுபோன்ற கருத்தை ராமதாஸ் கூறியிருக்கிறார். இதன் மூலம், தந்தை, மகன் பிரச்னை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், “2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன். அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது. என் உத்தரவுப்படி தலைவராக செயல்படுவேன் எனறு அன்புமணிக்கு கூறினார் எனக்கு மகிழ்ச்சி.

“நானே பாமக தலைவர்.. அன்புமணிக்கு தரமாட்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன் என நேற்று சொன்னதற்கு 99 சதவீத பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1 சதவீதம் அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.

தந்தை தாயை மதிக்கனும் என்றால் சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது. தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார்.  தூக்க மாத்திரை போட்டு தூக்கம் வராத அளவுக்கு அன்புமணி படுத்துகிறார். அவரை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.

மன உளைச்சலை உண்டாக்கிறார் அன்புமணி. எனக்கு கட்டளை இட அவர் யார்? எனக்கு கட்டளையிட அன்புமணிக்கு நான் அதிகாரம் கொடுக்கவில்லை.  அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிவிட்டு, மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார்.

என் குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று கட்சி தொடங்கியபோது கூறினேன்.  அதனை காபாற்ற முடியவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதின் பேரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டது” என்று பேசியுள்ளார்.

பாமகவில் என்ன பிரச்னை

பாமகவில் கடந்த சில மாதங்களாகவே அன்புமணிக்கும், ராமதாசுக்கும் அதிகார போட்டி நிலவுகிறது.  தான் தான் கட்சிக்கு தலைவர் என்று இருவரும் கூறி வருகின்றனர்.  சமீபத்தில் கூட, தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு சென்ற அன்புமணி இருவருக்கும் இடையிலான பிரச்னை குறித்து பேசினர். இருப்பினும்  இருவருக்கும் இடையே பிரச்னை முடியவில்லை.  2025 ஜூன் 13ஆம் தேதியான நேற்று கூட, பிரச்னை முடியவில்லை என்றும் டிராவில் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us