AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமதாஸ் தலைமையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்… பொதுச்செயலாளர் மாற்றம்?

PMK Leadership Crisis: பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. 2025 ஜூன் 15 அன்று புதிய மாவட்டச் செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

ராமதாஸ் தலைமையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்… பொதுச்செயலாளர் மாற்றம்?
புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jun 2025 06:38 AM IST

சென்னை ஜூன் 15: பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (Founder Dr. Ramadoss) மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) இடையே நிலவி வரும் கருத்து மோதல்களுக்கு மத்தியில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் இன்று 2025 ஜூன் 15 ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் (Possibility of changing the Secretary General) தகவல்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பான சூழலில், புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடரும் தந்தை மகன் மோதல்

கடந்த சில நாட்களாகவே பா.ம.க.வில் உள்கட்சிப் பூசல் தீவிரமடைந்து வருகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். சமீப காலமாக, பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்களை அவர் மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ஆனால், அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளே அப்பதவியில் தொடர்வார்கள் என்று அறிவித்து வருகிறார், இது குழப்பத்தை அதிகரித்துள்ளது.

டாக்டர் ராமதாஸின் அதிரடி அறிவிப்புகள்

இந்த உட்கட்சி மோதல் வெளிப்படையாகத் தெரிந்த நிலையில், கடந்த முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், “2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதற்கு அடுத்த நாளே (ஜூன் 13 ஆம் தேதி ) டாக்டர் ராமதாஸ் மேலும் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். “என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன்” என்று கூறி, அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். டாக்டர் ராமதாஸின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டுகள், அன்புமணி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பா.ம.க.வில் உள்கட்சிப் பூசல்

இன்று 2025 ஜூன் 15 ஆலோசனை கூட்டம் – பொதுச்செயலாளர் மாற்றம்?

இந்த பரபரப்பான சூழலில், புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று 2025 ஜூன் 15 தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றிவிட்டு, புதிய பொதுச்செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பா.ம.க. அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us