AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு மாதமாகியும் கிடைக்காத ஒரு வயது குழந்தை – திணறும் போலீஸ் – ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

Ranipet Missing Child Case : ராணிப்பேட்டை அருகே, கடந்த செப்டம்பர் 26, 2026 அன்று சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயதுப் பெண் குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் குழந்தை குறித்து எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

ஒரு மாதமாகியும் கிடைக்காத ஒரு வயது குழந்தை – திணறும் போலீஸ் – ராணிப்பேட்டை அருகே பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Oct 2026 19:34 PM IST

ராணிப்பேட்டை, அக்டோபர் 21 : ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே, கடந்த செப்டம்பர் 26, 2026 அன்று சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயதுப் பெண் குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் குழந்தை குறித்து எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக முயன்று வந்தாலும், இதுவரை எந்த தகவலும் கிடைக்கில்லை என கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயம்

லாலாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருப் பகுதியில், சேகர் மற்றும் பிரேமா (23) என்ற தம்பதி சாலையோரம் வசித்து வருகின்றனர். நிரந்தர வீடு இல்லாத இவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து விற்றும், யாசகம் பெற்றும் சாலையோரத்திலேயே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரி என்ற ஒரு வயதுப் பெண் குழந்தை உள்ளது.

இதையும் படிக்க : ஓட்டுநருக்கு ஏற்பட்ட வலிப்பு… கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் டிரைவர், ஆட்டோ ஓட்டுநர் பலி…. கோவையில் பரபரப்பு

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26, 2026 அன்று, சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையைக் கண்டுபிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.

எந்த தகவலும் கிடைக்காததால் திணறும் போலீஸ்

ஆனால், குழந்தை காணாமல் போன பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும், வேறு எந்தத் தடயமும் கிடைக்காததாலும், விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் போலீசார் திணறி வருகின்றனர். குழந்தை மாயமாகி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், குழந்தையின் நிலை என்ன என்ற கவலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குழந்தை மகேஸ்வரி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தையோ, அவசர உதவி எண் 112 அல்லது குழந்தைகள் உதவி எண் 1098-ஐயோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதே போல செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் மகள் இருக்கிறார். அவர் ஆலம்பூண்டியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 11, 2026 அன்று0 இரவு , சிறுமி வழக்கம்போல் வீட்டில் பெற்றோருடன் உறங்கச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க : வீர வணக்க நாள்.. பணியில் மரணம் அடைந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ.5.96 கோடி.. முதல்வர் விஜய் வழங்கினார்!

அன்றிரவு காற்றோட்டத்துக்காக வீட்டின் பின்பக்கக் கதவைப் பெற்றோர் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுநாள் காலை சுமார் 6 மணிக்குக் கண்விழித்த பெற்றோர், அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10 நாட்களாகியும் குழந்தை கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Follow Us