AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பில் சோகம்… கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பலி… 3 பேர் பலத்த காயம்

SJ Surya Killer Shooting Accident One Dies: சென்னையில் நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கில்லி படப்பிடிப்பு தளத்தில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பில் சோகம்… கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பலி… 3 பேர் பலத்த காயம்
கோப்புப்படம்
Baskar P
Baskar P | Updated On: 03 Jun 2026 09:05 AM IST

சென்னை பெரம்பூர் பென்னி மில்லில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் கில்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் சூட்டிங்கில் பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் சிலிண்டர் வெடிப்பது போன்ற காட்சியை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணிபுரிந்து வந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன் ( 26 வயது), குன்றத்துரை சேர்ந்த சக்திவேல் ( 27 வயது), மதுரவாயல் பகுதியை சேர்ந்த சூர்யா ( 23 வயது), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தினகரன் ( 24 வயது) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கேஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்த சக ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொழில் நுட்ப கலைஞர் பரிதாப மரணம்

அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்தது தொழில்நுட்ப கலைஞரான மதன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப கலைஞரின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகிகள் இருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

திரைப்பட சூட்டிங்கில் நிகழும் விபத்து

திரைப்பட சூட்டிங்கின் போது, இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதே போல, நடிகர் ரஜினி காந்த் நடித்து வரும் ஜெயிலூர் 2 படப்பிடிப்பின் போதும், முன்னணி நடிகர்களான பலர் படங்கள் சூட்டிங் போதும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. தற்போது, எஸ். ஜே. சூர்யா நடித்து வரும் கில்லர் திரைப்படத்தில் பலூனுக்கு அடைக்கும் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திரைத்துறை வட்டாரத்தில் மிகுந்த சோகம்

இந்த உயிரிழப்பு சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!

Follow Us