பெற்றோர் உஷார்.. தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி.. திருவள்ளூரில் சோகம்
Tiruvallur Newborn Dies : திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர், அக்டோபர் 12 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. பிறந்த குழந்தைகள் மூச்சுத்திணறலால் உயிரிழந்து வருகின்றனர். எனவே, குழந்தைளுக்கு பால், உணவு கொடுக்கும்போது கவனமாக பெற்றோர் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், சில கவனக் குறைவால் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பிரெய்சி. இவர் தம்பதிக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 2025 அக்டோபர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டிற்கு பிரெய்சி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். அப்போது, குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதனால் பதறிய பிரெய்சி உடனடியாக ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
Also Read : சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?
தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
அங்கு குழந்தையை பரிசோதனை மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்
மேலும், குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது கவனமாக கொடுக்க வேண்டும். குழந்தைக்கு படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
அமர்ந்து தான் கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன் குழந்தை படுக்க வைக்க கூடாது. சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு உடனடியாக விழுங்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்படலாம். எனவே, குழந்தைகளுக்கு பால் உணவு கொடுக்கும்போது கவனமுடன் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.