Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Namakkal: 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. சிக்கிய பைக் மெக்கானிக்!

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சதீஷ் குமார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோழிப்பண்ணையில் வேலை செய்தபோது ஏற்பட்ட பழக்கம் தற்போது குழந்தை பெற்றெடுக்கும் நிலைக்கும் வந்துள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Namakkal: 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை..  சிக்கிய பைக் மெக்கானிக்!
சிறுமிக்கு பிறந்த குழந்தை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Oct 2025 07:18 AM IST

நாமக்கல், அக்டோபர் 11: நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் சதீஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மெக்கானிக் தொழில் செய்து வந்த சதீஷ் குமார் சொந்தமாக இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தனது அக்காவுடன் இருசக்கர வாகனம் பழுது பார்க்க 15 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அப்போது சதீஷ் குமார் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அச்சிறுமி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணுடன் சதீஷ் குமார் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் எல்லை மீறி சென்றுள்ளது. அடிக்கடி சிறுமியுடன் வெளியில் சந்தித்து சதீஷ் குமார் தனிமையில் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: திருமணம் செய்வதாக மோசடி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு சதீஷ் குமார் வரவழைத்தார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுமி கருவுற்றார். ஆனால் குழந்தை நன்றாக வளர்ந்த பிறகு இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மைனர் பெண் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து காவல்துறை அதிகாரிகள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் தனது கர்ப்பத்துக்கு சதீஷ் குமார் தான் காரணம் என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

Also Read: நள்ளிரவில் பிரிட்ஜில் இருந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த செயல்.. அடுத்து நடந்த ஷாக்!

அதன் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையில் சதீஷ் குமாரிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.