Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை போக்சோ வழக்கு: மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்…

Coimbatore Pastor Arrested: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்தார். சில மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர், கேரளா மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை போக்சோ வழக்கு: மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்…
மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 13 Apr 2025 14:45 PM

கோவை ஏப்ரல் 13: போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் கைது (John Jebaraj arrest) செய்யப்பட்டார். கேரள மாநிலம் மூணாறில் வைத்து ஜான் ஜெபராஜ்ஜை காவலர்கள் கைது செய்தனர். கோயம்புத்தூர் (Coimbatore) பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் பெயர்ச்சிக்குண்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35), கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்த இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்ததுடன், ‘கிங் ஜெனரேஷன்’ என்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வந்தார்.

சமூக வலைதளங்களில் ஆடல், பாடலுடன் கூடிய அவரது போதனைகள் மூலம் பரவலான பார்வையாளர்களை ஈர்த்திருந்த ஜான் ஜெபராஜ் மீது, கடந்த 2024 மே 21 ஆம் தேதி நடந்த அவரது வீட்டுவிருந்தில் கலந்துகொண்ட சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். அதன் பின்னர், போலீசார் அவரை தேடி வந்தபோதும் அவர் தலைமறைவாகி விட்டார்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், கோவை காவல் ஆணையர் சரவணா சுந்தர் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினார்.

உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல்

இதற்கிடையே, ஜான் ஜெபராஜ் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தாலும், போலீசார் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தனர். இந்தக் கோஷ்டி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்

இந்நிலையில், கடந்த 2025 ஏப்ரல் 12ஆம் தேதி இரவு, காவல் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படை, ஜான் ஜெபராஜை கேரள மாநிலம் மூணாறில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜை கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார், அழைத்து வந்தனர்.

பின்னர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 2025 ஏப்ரல் 13 நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் போலீஸ் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!...
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!...
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தம் - இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தம் - இந்தியா அறிவிப்பு...
முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் - முக்கிய அறிவிப்பு
முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் - முக்கிய அறிவிப்பு...
உங்களுக்கு இப்படியெல்லாம் கனவு வருதா? - உஷாரா இருங்க!
உங்களுக்கு இப்படியெல்லாம் கனவு வருதா? - உஷாரா இருங்க!...
மீண்டும் தாக்குதல் நடத்தினால் போர்தான் - இந்தியா கடும் எச்சரிக்கை
மீண்டும் தாக்குதல் நடத்தினால் போர்தான் - இந்தியா கடும் எச்சரிக்கை...
டைட்டிலே மாஸ்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப்படம் ரிலீஸ் அப்டேட்!
டைட்டிலே மாஸ்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப்படம் ரிலீஸ் அப்டேட்!...
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவனுக்கு கேக் வெட்டிய பெற்றோர்!
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவனுக்கு கேக் வெட்டிய பெற்றோர்!...
Live: இந்தியா - பாகிஸ்தான் பதட்டம் முடிவுக்கு வந்தது..
Live: இந்தியா - பாகிஸ்தான் பதட்டம் முடிவுக்கு வந்தது.....