Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virudhunagar: 2024ல் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் கொலை.. பழிவாங்கிய நண்பர்!

Virudhunagar Youth Murder: விருதுநகர் குல்லூர்சந்தையில் ஓராண்டு கிரிக்கெட் தகராறு காரணமாக ஸ்ரீ ஜெயச்சந்திர குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த ஜெயச்சந்திர குமார், நித்திய குமாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாகப் பழிவாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Virudhunagar: 2024ல் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் கொலை..  பழிவாங்கிய நண்பர்!
கைது செய்யப்பட்ட நபர்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Oct 2025 06:31 AM IST

விருதுநகர், அக்டோபர் 9: விருதுநகர் மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட தகராறுக்கு ஒரு வருடம் காத்திருந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீ ஜெயச்சந்திர  குமார் என்பவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் 3 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். 28 வயதான ஸ்ரீ ஜெயச்சந்திர குமார் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இப்படியான நிலையில் வாரத்தின் ஆறு நாட்களும் வேலைக்கு செல்லும் அவர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

2024ல் ஏற்பட்ட தகராறு

அந்த வகையில் அப்பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது ஸ்ரீ ஜெயச்சந்திர குமார், நித்திய குமார் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் செய்த போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, உடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

Also Read: பாலியல் தொழிலில் பள்ளி மாணவி.. சிக்கிய சினிமா பிரபலம்

ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நித்திய குமார் ஸ்ரீ ஜெயச்சந்திர குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இருவரும் ஒவ்வொரு வாரமும் கிரிக்கெட் விளையாட வந்தாலும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி இரவு குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் அணை நுழைவாயில் அருகே ஸ்ரீ ஜெயச்சந்திர குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

விசாரணையில் வெளிப்பட்ட உண்மை

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீ ஜெயச்சந்திர குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?

இந்த நிலையில் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நித்திய குமார், கோகுல ரமணன், ரஞ்சித் ஆகிய மூன்று பேரையும் சூலக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பு நித்திய குமாருடன் ஏற்பட்ட தகராறு ஸ்ரீ ஜெயச்சந்திரகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.அவரை மது பாட்டிலால் குத்தி கொலை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து நித்திய குமார், ரஞ்சித், கோகுல ரமணன் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.