திருமணம் செய்வதாக 50 பெண்களிடம் மோசடி.. சிக்கிய விருதுநகர் இளைஞர்!
Virudhunagar Crime News: மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்வதாகக் கூறி 50 பெண்களைப் பாலியல் வன்கொடுமை, பண மோசடி செய்த விருதுநகர் இளைஞர் சூர்யா கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த செவிலியர் புகாரை அடுத்து இந்த மோசடியானது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர், அக்டோபர் 2: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 50 பெண்களை பாலியல் வன்கொடுமை, பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் அதற்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திருமண தகவல் மையமாக செயல்பட்டு வரும் மேட்ரிமோனி மூலம் நடைபெறும் மோசடிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படியான நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் இவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
மேட்ரிமோனி மூலம் வந்த நபர்
அதில் எனக்கு மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து வந்தபோது சூர்யா என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். உங்களுடைய தகவல்களை மேட்ரிமோனியில் பார்த்ததாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என சொல்லி கோயம்பேடு பகுதிக்கு என்னை வரவழைத். தார் அங்கு சென்றதும் எனக்கு ஒரு கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
இதன் பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என என்னை சூர்யா நம்ப வைத்தார். மேலும் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி கொண்டார். இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு நாம் இருவரும் சென்னையில் சொந்த வீட்டில் தான் வாழ வேண்டும். அதானால் என்னிடம் ரூ.40 லட்சம் சேமிப்பு இருக்கிறது. மீதம் ரூ.10 லட்சம் இருந்தால் கடன் இல்லாமல் சொந்த வீடு வாங்கிவிடலாம் என என்னிடம் சூர்யா தெரிவித்தார்.
Also Read:கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!
இதனை நம்பி அந்தப் பெண் தனது சேமிப்பில் வைத்திருந்த பணம், 8 சவரன் நகை, வங்கியில் கடனாக ரூ8.7 லட்சம் ஆகியவற்றை சூர்யாவிடம் கொடுத்தேன். அனைத்தையும் பெற்றுக் கொண்ட பின் சூர்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது.
என்னிடம் பேசுவதை அவர் குறைத்துக் கொண்டார். இது தொடர்பாக நான் கேட்டபோது, நாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியதோடு தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
போலீசாரை அலைக்கழிய வைத்த சூர்யா
இதனை தொடர்ந்து புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சூர்யாவை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில் சூர்யா பயன்படுத்தி வந்த கார் திருநெல்வேலி மாவட்ட சுங்கச்சாவடியில் கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்தது .
அந்த எண்ணை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என தேட தொடங்கினர். இறுதியாக அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததும் அண்ணா நகர் போலீசார் அங்கு கிளம்பி சென்றனர். ஆனால் அங்கும் சூர்யாவை கண்டறிய முடியவில்லை.
Also Read: மிரண்ட சென்னை ஏர்போர்ட்… ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.. சிக்கிய கென்யா இளைஞர்!
15 நாட்கள் நெல்லையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களிலும் தேடினார். இறுதியாக சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அமைந்தகரை அருகே வந்தபோது போலீசாரின் பிடியிலிருந்து அவர் தப்பியோட முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக அவரது இடது கால் முறிந்தது. இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சூர்யா அனுமதிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
50 பெண்களிடம் மோசடி
இந்த நிலையில் சூர்யாவிடம் நடத்தப்பட்ட திடுக்கிடும் விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புகார் அளித்த இளம்பெண் மட்டுமல்லாமல் கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட பெண்களை சூர்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளாராம். மேட்ரிமோனி மூலம் தொலைபேசி அவர்களை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்து பாலியல் ரீதியாக உறவு கொண்டு அவர்களிடம் பணம் நகைகளை பெற்று தலைமறை வாங்கி விடுவது இவரது ஸ்டைலாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெற்று சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.