AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்ன முடிவு எடுத்தாலும்.. – திமுக எம்எல்ஏகளை சென்னையில் தங்க ஸ்டாலின் உத்தரவு

சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேசியுள்ளார். மேலும் மே 10, 2026 வரை எம்எல்ஏகளை சென்னையில் தங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

என்ன முடிவு எடுத்தாலும்.. – திமுக எம்எல்ஏகளை சென்னையில் தங்க ஸ்டாலின் உத்தரவு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 May 2026 21:05 PM IST

திமுக சட்டமன்ற எம்எல்ஏகளை சந்தித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேசியுள்ளார். மேலும் மே 10, 2026 வரை எம்எல்ஏகளை சென்னையில் தங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொடர்ந்தால்தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

திமுக எம்எல்ஏகளை சென்னையில் தங்க ஸ்டாலின் உத்தரவு

 

பாஜக பல மாநிலங்களில் செய்ததையே, காங்கிரஸ் தமிழ்நாட்டில் நமக்கு செய்திருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸின் திடீர் மாற்றத்தை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : தவெக விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

மற்றொரு பக்கம் அதிமுக எம்எல்ஏகளை புதுச்சேரியில் சந்தித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். அக்கட்சியின் சில எம்எல்ஏகள் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதிமுக எம்எல்ஏகள் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தவெகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் அதிமுகவிற்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow Us