AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

TVK Vijay : தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் மே 8, 2026 அன்று  தமிழக ஆளுநரை கண்டித்து காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது

தவெக விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவித்த காங்கிரஸ்
விஜய் - செல்வப்பெருந்தகை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 May 2026 17:10 PM IST

சென்னை, மே 7 : தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை  காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் மே 8, 2026 அன்று  தமிழக ஆளுநரை கண்டித்து காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. முன்னதாக ஆளுநரைக் கண்டித்து தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமைகோரியது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான ஆதரவை நிரூபிக்க தவறியதாக கூறி விஜய்யை ஆட்சி பொறுப்பேற்க ஆளுநர் அழைக்கவில்லை.

இதையும் படிக்க : தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்… தொல்.திருமாவளவன்!

ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநரின் முடிவை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி,  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மே 7, 2026 இன்று சென்னை ராஜ் பவனில் சந்தித்தார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் விஜய்யிடம் விளக்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? முதல்வராகிறாரா விஜய்?

இந்த நிலையில் தவெகவிற்கு முழு ஆதரவு வழங்கியுள்ள காங்கிரஸ், ஆளுநரின் முடிவுக்கு எதிராக மே 8, 2026 அன்று காலை 11 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us