AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்.. அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?

தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தவெக தலைவர் விஜய்யிடம் ஆளுநர் விளக்கியதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்..  அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?
ஆளுநருடன் தவெக நிர்வாகிகள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 May 2026 16:56 PM IST

சென்னை, மே 7 : தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரியும்,  ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த  நிலையில், இந்த விமர்சனங்களுக்கு ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது அதில், , தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் விளக்கியதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநரை சந்திக்க உரிமைகோரியது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான ஆதரவை நிரூபிக்க தவறியதாக கூறி விஜய்யை ஆட்சி பொறுப்பேற்க ஆளுநர் அழைக்கவில்லை.

ஆளுநர் தரப்பில் விளக்கம்

 

இதனையடுத்து ஆளுநரின் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  பெரும்பான்மையை விஜய் சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் அல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சுற்றிய அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை மே 7, 2026  இன்று சென்னை ராஜ் பவனில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் விளக்கியதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநர் மீது விமர்சனங்களுக்கு அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் தவெக தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us