Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை நிறுத்த வேண்டும்…வைகோ!

Vaiko Criticize Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிக்ழ்ச்சிகளில் விஜய் சினிமா டயலாக் பேசுவதில் இருந்து வெளியேற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை நிறுத்த வேண்டும்…வைகோ!
விஜய் சினிமா டயலாக் பேசுவதை நிறுத்த வேண்டும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Dec 2025 15:32 PM IST

இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக நான் மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் 10- ஆவது நடை பயணமாகும். இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். விஷப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பதற்காக எனது நடைபயணம் தொடங்க உள்ளது. எனது நடை பயணத்தில் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சி மீண்டும் 2026-இல் அமையும் வகையில் எனது அரசியல் கருத்தை பதிவு செய்வேன்.

என்ன சூழ்ச்சி செய்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்

எந்த கட்சிகள் சூழ்ச்சிகள் செய்தாலும் சரி திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று உறுதியாக ஆட்சி அமைப்பார்கள். திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளாக தீபத்தூணில் விளக்கேற்றும் வழக்கம் கிடையாது. ஆனால், இந்த விவகாரத்தை இந்துத்துவா அமைப்புகள் திட்டமிட்டு பெரிதாக்கி உள்ளது. முந்தைய காலங்களில் உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டும் விளக்கு ஏற்றிவிட்டு சென்று விடுவார்கள்.

மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!

சொந்த கருத்துக்களை தீர்ப்பாக தெரிவிக்கும் நீதிபதிகள்

ஆனால், இந்த ஆண்டு மலை மீது உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று புதிய வழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. நீதித்துறை, நிர்வாக துறை, சட்டமன்றம் ஆகியவை சேர்ந்துதான் ஒரு அரசு இயங்குகிறது. இதில், சமீபகாலமாக நீதித்துறையை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை, கருத்துக்களை திணிக்கும் செயல் நிகழ்ந்து வருகிறது.

இந்தியாவை காவி மயமாக்கி விட எண்ணம்

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் எந்த கலவரத்துக்கும் இடம் கொடுக்கவில்லை என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த நிலை நீடிக்க வேண்டும். திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் வந்தே மாதரம் கொடியை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆதரவு திரட்டுகின்றனர். ஆர் எஸ் எஸ் பின்புறத்தில் இந்துத்துவ அமைப்புகள் இந்தியாவையே காவி மயமாக்கி விடலாம் என்று நினைக்கின்றனர்.

விஜய் சினிமா டயலாக் பேசுவதை நிறுத்த வேண்டும்

இதை அவர்கள் வட மாநிலங்களில் செயல்படுத்தலாமே தவிர தமிழகத்தில் ஒரு காலமும் செயல்படுத்த முடியாது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை விட்டுவிட்டு அதிலிருந்து வெளியே வர வேண்டும். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் முழு பொறுப்பேற்கவில்லை.

மேலும் படிக்க: விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்…செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!