AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வி.எஸ். பாபு: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்

CM Vijay Visit V.S. Babu: சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வி.எஸ். பாபு: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2026 16:33 PM IST

செப்டம்பர் 23, 2026: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

9 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ் பாபு:

கடந்த 9 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று, வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ். பாபு போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

மேலும் படிக்க: இரண்டாவது முதலமைச்சர்.. அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம்: அமைச்சர் நிர்மல் குமார் மீது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு

வி.எஸ். பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் விஜய்:


இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.எஸ். பாபுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!

அதேநேரத்தில், சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Follow Us