AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி சடலமாக மீட்பு.. மாணவர்கள் கொந்தளிப்பு.. போலீசார் குவிப்பு!!

Kanchipuram Student Death: காஞ்சிபுரம் ஏனாத்தூர் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவி லிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி சடலமாக மீட்பு.. மாணவர்கள் கொந்தளிப்பு.. போலீசார் குவிப்பு!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Aug 2026 08:54 AM IST

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 21: காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஸ்ரீ சங்கர சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் விடுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வரும் இந்த உயர்கல்வி நிறுவன விடுதியில், மாணவி ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் தங்கை முறை பெண்ணுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காததால் கொலை.. 3 பேர் அதிரடி கைது!

விடுதியில் சடலமாக கிடந்த ஆந்திர மாணவி:

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 19 வயதான லிகிதா என்ற மாணவி, இந்தப் பல்கலைக்கழகத்தில் கணினி சார்ந்த பொறியியல் (ECE) பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த லிகிதாவின் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்துத் தகவலறிந்த பொன்னேரிக்கரை காவல் நிலையப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளால் பரபரப்பு:

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர் பதற்றம் மற்றும் மன உளைச்சல் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துர்நாற்றம் வீசிய பிறகே வெளிவந்த அதிர்ச்சி:

மாணவி இறந்து சில நாட்கள் கடந்த நிலையில் அறை பூட்டப்பட்டுக் கிடந்ததும், துர்நாற்றம் வீசிய பிறகே விடுதி நிர்வாகம் கதவை உடைத்துப் பார்த்ததும் விடுதி பாதுகாப்பின் போதாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வகுப்புகளுக்கு வராத மாணவி குறித்து விடுதி காப்பாளர்களும் நிர்வாகமும் ஏன் உடனடியாக ஆய்வு செய்யவில்லை என்றும், பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விடுதியில் போதிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படாததே இத்தகைய சோக சம்பவங்களுக்குக் காரணம் எனச் சாடிய மாணவர்கள், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் நியாயமான விசாரணையும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க: வாழப்பாடி அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 4 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. இருவர் கைது!

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொன்னேரிக்கரை போலீசார், மாணவி தற்கொலை முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன, அவருக்கு ஏதேனும் மன உளைச்சல் இருந்ததா அல்லது விடுதியில் ஏதேனும் சிக்கல்கள் நிலவியதா என்ற பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us