தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபரும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 15 : தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 15, 2026 இன்று 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுககுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபரும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!




அதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 16, 2026 நாளையும், ஆகஸட் 17, 2026 நாளை மறுநாளும் மிதமான மழைய பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் ஆகஸ்ட் 15, 2026 இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரை வரும் ஆகஸ்ட் 18, 2026 வரை வட உள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 15, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 17, 2026 வரை 3 நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மேலும், நண்பகல் நேரத்தில் அனல்காற்றுடன் வீசக்கூடும் எனவும் மாலை மற்றும் இரவு வெப்பச்சலன மழையின் பரப்பளவும், தீவிரமும் குறைந்து காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை எப்படி வந்தது?
மேலும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மாலை மற்றும் இரவு வேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாக கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகலில் நல்ல வெயில் காட்டும் என்பதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அறுவடை பணிகளை திட்டமிட்டுள்ள விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ளலாம். அதேபோல தானியங்களை உலர்த்துவது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். மேலும், இரவு நேர இடிமழை வாய்ப்பை கருத்தில் கொண்டு அறுவடை செய்த தானியங்களை மழைச்சாரல் படாதவாறு பத்திரப்படுத்தி வைக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.