நாளை இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வெளியான தகவல்
Heavy Rain Alert : தமிழகத்தில் மே 23, 2026 நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 22 : தமிழகத்தில் மே 23, 2026 நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
நாளை இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் நிலவும் வழிமண்டல சுழற்சி காரணமாக குமரிக்கடல் பகுதிகள் வரை கேரளம, தென் தமிழக பகுதிகள் வழிாக ஒரு வளிமண்டல காற்றழுத்த பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மே 23, 2026 நாளை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மே 24, 2026 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு – நடந்தது என்ன?




மேலும், வருகிற மே 25, 2026 திங்கள் கிழமை முதல், மே 28 வியாழக்கிழமை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மே 23, 2026 நாளை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வருகிற 24, 2026 ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!
தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் மே 23, 2026 நாளை வெப்ப நிலை வழக்கமான அளவிலேய இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.