ஒரு பக்கம் வெயில் கொளுத்தும்.. மறுபக்கம் மழையும் வெளுக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..
Weather Update: வரும் மே 25ம் தேதி வரை உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
Tamilnadu Weather Today: தமிழிகத்தில் இன்று சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், சுமார் 3.1 கிமீ முதல் 4.5 மீ உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து அறியலாம்.
மேலும் படிக்க: Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (மே 22) சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (மே 23) திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (மே 24) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 25ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
மே 26ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை விவரம்:
வரும் மே 25ம் தேதி வரை உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுாட்டை பொறுத்தவரையில், உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று (மே 22) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
இதையும் படிங்க : “பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது”.. காவல் நிலையத்தில் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ கடும் வாக்குவாதம்!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41-42 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.