கடலூரில் இடி தாக்கி 4 பெண்கள் பலி… விவசாய நிலத்தில் வேலை பார்த்தபோது நேர்ந்த சோகம்
Lightning Tragedy : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் வயலில் வேலை பார்த்து வந்த 4 பெண்கள் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 16, 2025 அன்று வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தீபாவளிக்கு (Diwali) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருடகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளியை நம்பி கடைபோட்டிருக்கும் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிறகு இந்த தீபாவளிக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடலூரில் விவசாய நிலத்தில் வேலை பார்த்த 4 பெண்கள் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடி தாக்கி 4 பெண்கள் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் என்ற கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்வபம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்தில் களை எடுக்கும்போது இடி தாக்கியதில் 4 பெண்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!




கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகர் கருப்பசாமி நகரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்கள் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்த அனைவரும் தினக் கூலிகள் என்பதால் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலால் தொடரும் மரணங்கள்
விவசாய தொழிலாளர்கள், கட்டிட வேலை பார்ப்பவர்கள் திறந்த வெளிகளில் வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. அரசு இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க : ஏர் பேக்கால் பறிபோன 7 வயது சிறுவனின் உயிர் – உயிரைக் காக்க வேண்டிய பொருளே உயிரை வாங்கிய பரிதாபம்
மழை காலங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக இடி மின்னல் ஏற்படும்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை அளிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இதுபோன்ற மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.