ஐடி ரெய்டு நடந்தது உண்மை.. ஆதாரத்துடன் களமிறங்கிய செல்வப்பெருந்தகை.. வெளியான அதிரடி வீடியோ!
Selva Perundurai Explanation IT Raid: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளார். மேலும், வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் ராகுல் காந்தியின் நிகழ்வில் பங்கேற்பதை தடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் சோதனை மேற்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது தொடர்பாக ஆதாராங்களை வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 24) செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு கூறியதாவது: தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் எத்தனை பேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
வருமான வரித்துறையினர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
இதே போல, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் எத்தனை பேர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பாக வருமான வரித்துறையினர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் தான் மத்திய அரசின் ஒரவஞ்சனை நிலைப்பாடு தெரிய வரும். காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் எனது தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்திருந்தனர்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை…




வருமான வரித்துறை சோதனை குறித்த வீடியோ
பின்னர், வீடியோ காட்சிகளை போட்டு பார்த்து அதில் பதிவான காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். பின்னர், வீட்டில் ஏதும் கிடைக்காததால் எழுதி வாங்கி விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர். அப்போது, வீட்டில் கேமரா இயங்கியதால் அவர்கள் வெளியேறியது பதிவாகி இருந்தது. படப்பையில் உள்ள எனது அலுவலகத்தின் முன்பாக 6 கார்களில் தமிழ் தெரியாத ஹிந்தி அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். ஜனநாயக நாட்டில் வருமானவரித்துறை நேர்மையாக சோதனை மேற்கொண்டால் எதற்காக சிசிடிவி கேமராக்களை ஆப் செய்ய வேண்டும். வீட்டில் இருந்தவர்களிடம் செல்போன்களை வாங்கிக்கொண்டு இங்கு பணம் உள்ளது அந்த பணத்தை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.
சிறுமாங்காடு தலைவர் வீட்டில் சோதனை
இதே போல, சிறு மாங்காடு தலைவர் கன்னியப்பன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பணம் எங்கே என்று மிரட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வங்கி கணக்கில் கட்சி தலைமை ரூ.25 லட்சம் மட்டுமே அனுப்பியிருந்தது. டெல்லி தலைமை ரெய்டு நடத்த கூறினால் வெளிப்படை தன்மையுடன் இந்த பகுதியில் ரெய்டு நடத்தினோம் என்று கூற வேண்டும். இதில் எவ்வளவு பணம் கிடைத்தது என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?