AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னை தீர்த்துக்கட்ட முயற்சி? சாப்பாட்டை தொட மறுப்பு.. புழல் சிறையில் ஞானசேகரன் கதறல்!

Anna University Student Case Gnanasekaran: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் தன்னை சிறையில் கொலை செய்ய முயற்சி நடப்பதாக கடந்த 3 நாள்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

என்னை தீர்த்துக்கட்ட முயற்சி? சாப்பாட்டை தொட மறுப்பு.. புழல் சிறையில் ஞானசேகரன் கதறல்!
ஞானசேகரன் உண்ணாவிரதம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 24 Apr 2026 10:32 AM IST

சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கடந்த 2024- ஆம் ஆண்டு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை அங்கு வந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனை தடுக்க முயன்ற அந்த மாணவியின் ஆண் நண்பரை ஞானசேகரன் அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்திருந்த மாணவியை ஒரு நபர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ஞானசேகரன் முதலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை

போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் எனவும், அவர் மீது திருட்டு வழக்கு இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து சுமார் 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகளான சினேக பிரியா, பிருந்தா, ஜமான் ஜமால் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை…

குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை

சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்குக்கான குற்ற பத்திரிக்கை கடந்த ஜூன் மாதம் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று முதல் தற்போது வரை சென்னை புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி இரவு திடீரென ஞானசேகருக்கு கடுமையான வலிப்பு ஏற்பட்டதால் கூறப்பட்டது.

என்னை சிறையில் கொல்ல முயற்சி

அப்போது, அவரை சிறை காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளித்த பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிறை அதிகாரிகள் தன்னை கடுமையாக தாக்குவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சிறையிலேயே தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும் கூறி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

Follow Us