Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Edappadi Palaniswami: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

2026 Tamil Nadu Assembly Elections: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சங்கரன்கோயிலில் பேசிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, 20,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

Edappadi Palaniswami: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2025 08:56 AM

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 7: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி சங்கரன்கோயில் விருந்தினர் மாளிகை முன்பு, அதிமுக (ADMK) தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிசாமி திமுக (DMK) என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்றும், நாங்கள் திமுகவை பற்றி பேசினார் கம்யூனிஸ்ட் கட்சி காரர்களுக்கு எதற்காக வலிக்கிறது என்றும் தெரிவித்தார்.

திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி:

சங்கரன் கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “ வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் முகத்தில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது. அதன்படி, தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி கனவு இனி நிறைவேறாது. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி பலமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என நினைக்கிறார். ஆனால், நாங்கள் மக்கள் கூட்டணியில் வெற்றி பெறுவோம். திமுக கட்சி கார்ப்ரேட் கம்பேனியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயல்படுத்துங்கள், திமுக கட்சி அல்ல கார்ப்ரேட் கம்பேனி.

ALSO READ: அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..

கடந்த 4 ஆண்டுகளில் திமுக 20,000 கோடி ஊழல் செய்துள்ளது. இந்த ஊழல் ஆட்சி தேவைதானா..? எல்லா துறைகளிலும் ஊழல், ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சியில்தான். மக்கள் நினைத்தால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் எஜமானர்களாகிய மக்கள் ஆதரவில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிதான் வெல்லும்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்:

விவசாயி மக்களோடு மக்களாக நான் துணை நிற்பேன். அதிமுக ஆட்சியின்போது மின்கட்டணம் உயரவில்லை. டாஸ்மாக்கிலும் ஊழல், நீங்களே கணக்கு போட்டு பாருங்கள் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது. திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக. எல்லாத்துக்கும் வரி போட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

ALSO READ: தூய்மை பணியாளர்கள் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி:

தொடர்ந்து, “நாங்கள் திமுகவை பற்றி பேசினார் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு ஏன் வலிக்கிறது. திமுக ஆட்சியில் தவறுகளே நடக்கவில்லையா..? கம்யூனிஸ்ட் கட்சிகள் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது..? மக்கள் பிரச்சனைகளை பேசினால்தான், மக்கள் இதை நினைத்து பார்ப்பார்கள். அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தோம்.” என்று தெரிவித்தார்.