முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? – லஞ்ச ஒழிப்புத்துறை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஜூன் 25, 2026 இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 25 : திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஜூன் 25, 2026 அன்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு கரூரில் சாலைப்பணியை சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான வீடு மற்றும் அலுவலகங்களில் ஜூன் 25, 2026 இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை மற்றும் கரூரில் உள்ள அவரது நெருங்கிய வட்டாரங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : தவெக அரசு உள்நோக்கத்தில் வெள்ளை அறிக்கை வெளியீடு.. செந்தில் பாலாஜி பெரும் குற்றச்சாட்டு!
அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து, பணிகள் மேற்கொள்ளாமலேயே சாலை பணிகளை மேற்கொண்டதாக அரசின் பணத்தை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக கரூரை சேர்ந்த சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 ஆம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ. 3.23 கோடி பணம் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிக்க : அரசு கடன் வாங்குவதில் தவறில்லை, தமிழகத்துக்கு நிதி நிலுவை இல்லை… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு கடந்த ஜூன் 23, 2026 அன்று அனுமதி வழங்கியது. இதனையடுத்து லஞ்ச ஒழிபபுத்துறை கடந்த ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் ஜூன் 25, 2026 இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


