’வருங்கால துணை முதல்வரே’ பதறிய நயினார் நாகேந்திரன்.. நிர்வாகி செய்த சம்பவம்!
Tamil Nadu BJP Chief Nainar Nagendran : வருங்கால துணை முதல்வரே என மேடையில் நயினார் நாகேந்திரனை பாஜக நிர்வாகி வரவேற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையிலேயே, தன்னை துணை முதல்வர் என்றெல்லாம் சொல்லக் கூடாது என நயினார் நாகேந்திரன் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை துணை முதல்வர் என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயினார் நாகேந்திரன்
சென்னை, ஜூலை 20 : அரியலூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் ‘வருங்கால துணை முதல்வர் நயினார் நாகேந்திரேன்‘ என பாஜக நிர்வாகி மேடையிலேயே வரவேற்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அதிமுக பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி தொடர்பாக சலசலப்புகள் நீடித்து வருகிறது. இதனால், நயினார் நாகேந்தரனை துணை முதல்வர் என பாஜக நிர்வாகி குறிப்பிட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனை அடுத்து, மேடையிலேயே அதிர்ச்சியான நயினார் நாகேந்திரன், அவ்வாறு அழைக்க வேண்டாம் என சைகை காட்டி பாஜக நிர்வாகியிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.
2024 மக்களவை தேர்தலில் தனித்தனியாக களம் கண்ட, அதிமுக பாஜக, தற்போது சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பை வெளியிட்டார். கூட்டணி அமைத்த நாளில் இருந்தே கூட்டணிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித் ஷா கூறி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறி வருகிறது.
Also Read : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!
அதிமுக பாஜக கூட்டணி
இதன் மூலம், அதிமுக தரப்பில் ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவாக தெரிகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடாக இருப்பதாக தெரிகிறது. இதனால், அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இருந்து வருகிறது.
இதற்கிடையில், 2025 ஜூலை 27,28ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவின் கடைசி நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.
’வருங்கால துணை முதல்வரே’
இதன் காரணமாக, பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஆலோசனை கூட்டம் 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனை மாவட்ட தலைவர் பரமேஸ்வரி மேடையில் வரவேற்றார். அப்போது, அவர் நயினார் நாகேந்திரனை துணை முதல்வர் என வரவேற்று இருக்கிறார்.
Also Read : தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
இதனை கேட்டு நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மேடையிலேயே அதிர்ச்சியான நயினார் நாகேந்திரன், அவ்வாறு அழைக்க வேண்டாம் என சைகை காட்டி பாஜக நிர்வாகி பரமேஸ்வரிக்கு அறிவுறுத்தி உள்ளார். இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.