சி.வி.சண்முகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி – நாளை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்?
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏகள் சி.வி.சண்முகத்தை சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவர் தவெகவில் இணையவுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னை, மே 27 : கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் அதிமுகவை சுற்றி நிலவி வந்த பரபரப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏகள் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த மனுக்களை திரும்ப பெற்றிருக்கிறார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எஸ்.பி.வேலுமணி தரப்பு பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது சி.வி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏகள் சி.வி.சண்முகத்தை சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எஸ்.பி.வேலுமணியுடன், தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க : மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் சி.வி.சண்முகம்?
இதனையடுத்து இந்த சந்திப்புக்கு பிறகு சி.வி சண்முகம் கோவமாக அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் சென்றார். இதனையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தவெகவில் இணையவுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், தனது ஆதரவாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசியதாக கூறப்படும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அப்போது, அவர் அதிமுகவுக்கு உண்மையாக செயல்பட்டிருக்கிறேன் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் இந்த கட்சிக்கு நல்லதல்ல என்றும் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் நாளை சட்டமன்ற தலைவரை சந்தித்து கடிதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. கோரிக்கைகளை ஏற்க மறுத்து இபிஎஸ் பிடிவாதம்!!
முன்னதாக அதிமுக எம்எல்ஏகள் இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் 4 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவி்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து அவர்களது தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்திற்கு இந்த 4 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.