AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவொற்றியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – பீகார் இளைஞர் போக்சோவில் கைது

Chennai Crime: இந்த சம்பவம் குறித்து போலீசார் பொதுமக்களிடம் விளக்கம் அளித்தபோது, இது கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அல்ல என்றும், ஒரே ஒருவர் மட்டுமே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பீகாரைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருவொற்றியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – பீகார் இளைஞர் போக்சோவில் கைது
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Oct 2026 15:46 PM IST

அக்டோபர் 7, 2026: சென்னை அருகே திருவொற்றியூரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:

திருவொற்றியூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அவர்களின் 5 வயது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பாலியல் வன்கொடுமை செய்த ராகுல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது:

விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க போலீசார் சென்றபோது, அங்கிருந்த சிலர் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலரை பிடித்து தாக்கியதாகவும், சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை நிலவரம் என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் பொதுமக்களிடம் விளக்கம் அளித்தபோது, இது கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அல்ல என்றும், ஒரே ஒருவர் மட்டுமே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பீகாரைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 5 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us