AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி.. ஸ்கெட்ச் போட்டு நண்பனையே கொன்று கிணற்றில் வீசிய காதலன்!!

Chennai Mangadu Murder Case: சென்னை மாங்காடு அருகே காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞரை, அவரது பள்ளி நண்பரே திட்டம் போட்டு அடித்துக் கொன்று பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் குற்றவாளிகள் சரணடைந்ததை தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி.. ஸ்கெட்ச் போட்டு நண்பனையே கொன்று கிணற்றில் வீசிய காதலன்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Sep 2026 09:56 AM IST

சென்னை, செப்.28: சென்னை மாங்காடு அருகே, காதலிக்கு இரவில் ஆபாச குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்த நபரை, அவரது பள்ளி நண்பரே தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொன்று பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நட்பாகப் பழகிய பள்ளி நண்பரே திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!”.. காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த தலைமை காவலர்.. கோவையில் ஷாக் சம்பவம்!!

முக்கோணக் காதலும் பொறாமையும்:

சென்னை மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவனேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பெண் யுவனேஷின் பள்ளி நண்பரான விக்கி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். தன் நண்பனையே அந்தப் பெண் காதலிக்கிறார் என்பதை அறிந்த யுவனேஷ், இதனால் கடுமையான ஆத்திரமும் பொறாமையும் அடைந்துள்ளார்.

கொலைக்குத் தீட்டப்பட்ட திட்டம்:

இதையடுத்து, ஆத்திரமடைந்த யுவனேஷ் அந்தப் பெண்ணுக்கு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பித் தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளார். தன் காதலிக்கு யுவனேஷ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதை அறிந்து கொதித்தெழுந்த விக்கி, அவருக்குப் பாடம் புகட்டத் தீர்மானித்தார். இதற்காகத் தனது நண்பர் பார்த்திபன் என்பவருடன் சேர்ந்து, யுவனேஷைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

மது விருந்தும் கொடூரக் கொலையும்:

திட்டத்தின்படி, விக்கியும் பார்த்திபனும் சேர்ந்து யுவனேஷை மது அருந்துவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு யுவனேஷிற்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். யுவனேஷ் போதையில் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, மறைத்து வைத்திருந்த மது பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் யுவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, யுவனேஷின் உடலைக் கல்லோடு சேர்த்துக் கட்டி, அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனிடையே, இரவு வெகு நேரமாகியும் யுவனேஷ் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடத் தொடங்கினர்.

இதையும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

காவல் நிலையத்தில் சரண்:

யுவனேஷைத் தேடும் பணி தீவிரமடைந்ததைக் கண்டு அச்சமடைந்த விக்கி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும், மேலும் தப்ப முடியாது என்பதை உணர்ந்து மாங்காடு காவல்நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தனர். குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாழடைந்த கிணற்றிலிருந்து யுவனேஷின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விக்கி மற்றும் பார்த்திபன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாங்காடு காவல்துறையினர், இந்த மோதலுக்கு வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us