கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி!
Wife Killed Husband With Help Of Lover | தென்காசியில் திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த நிலையில், கணவனை, மனைவி தனது காதலன் உதவியுடன் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்காசி, செப்டம்பர் 28 : தென்காசியில் (Tenkasi) 10 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபரின் வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்த நபரின் மனைவியே அவரது காதலன் உடன் இணைந்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த நிலையில், திட்டமிட்டு இந்த கொலை அரங்கேற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்க்கலாம்.
தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்த பண்மொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில், 10 நாட்களுக்கு முன்னதாக ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துச் சென்ற போலீசார், உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பண்மொழி – தென்காசி சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’ – முதல்வர் விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்




காரில் அழைத்துச் சென்று கொலை செய்த நபர்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திக்கும் வகையில் இருந்த இரண்டு கார்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, அப்துல் ரகுமான் என்பவரை, இசை இந்திரகுமார் என்பவர் காரில் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், இசை இந்திரகுமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : “சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!”.. காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த தலைமை காவலர்.. கோவையில் ஷாக் சம்பவம்!!
ரகுமான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வேலை செய்து வரும் நிலையில், அதே பகுதியில் தனது மனைவி அம்சா நிஷா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், இந்திரக்குமார் வேலை செய்து வந்த நிலையில், அங்கு சென்று ரகுமான் தனது குடும்பத்துடன் அடிக்கடி உணவு அருந்தியுள்ளார். அப்போது, இந்திரகுமார் மற்றும் ரகுமானின் மனைவி இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தான், ரகுமான் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவரை தீர்த்துக்கட்ட நினைத்து திட்டமிட்டு இந்த கொலையை ரகுமானின் மனைவி மற்றும் காதலர் அரங்கேற்றியுள்ளனர்.