AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை… 9 ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும் ?

ஆகஸ்ட் 7ஆம் தேதியைப் பொருத்தவரையில், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை… 9 ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும் ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 3, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 37.6 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸாகவும், மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நிலத்தின் வெப்பம் குறைந்து காணப்படுகிறது.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல் கொடுமை? வேடசந்தூர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு.. திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு!

இந்த நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதியைப் பொருத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதியைப் பொருத்தவரையில், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us