AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..

Annamalai On Tiruparankundram Issue: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .......... அரசியலா?” என ஒரு பதிவு போடுகிறார். இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா? என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Dec 2025 06:40 AM IST

சென்னை, டிசம்பர் 6, 2025: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவை கண்டித்து அண்ணாமலை பேசியுள்ளார். “இது ஒரு முதல்வர் போடும் பதிவாக இருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று 1990-ம் ஆண்டிலிருந்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது,” என தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் திரித்து பேசுகிறார்:

இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பையும் 1996, 2014, 2017-ம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்பையும் அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே திரித்து உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். 1996, 2014, 2017-ல் கோரிக்கைகள், அதன் தீர்ப்பும், தற்போதையை கோரிக்கை, தீர்ப்பும் வேறு வேறு. நீதிபதியின் தீர்ப்புக்கு ஆட்சேபனை இருந்தால், நியாயப்படி தர்காதான் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், கோயில் செயல் அலுவலர் முறையீடு செய்திருக்கிறார். அவரை, திமுக வேண்டுமென்றே தூண்டி விட்டிருக்கிறது.

மேலும் படிக்க: திருச்சி – சென்னை விமான கட்டணம் ரூ.41,000 – இண்டிகோ விமானம் ரத்தால் மளமளவென உயர்வு – பயணிகள் கடும் அவதி

அதே நேரத்தில் காவல் துறை தங்கள் கடமையை செய்யாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. அவர்களை நீதிபதி அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. 2005-ம் ஆண்டில் நடந்த அமைதிக் குழு பேச்சுவார்த்தையில், தர்கா இருக்கும் இடத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என இஸ்லாமியர்கள் கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது.

இந்துக்களுக்கு எதிராக திமுக அரசியல் செய்து வருகிறது:

திமுக அரசு திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என பெயர் வைத்தும், ராமநாதபுரம் எம்.பி. சிக்கன் பிரியாணி சாப்பிடுவதையும், நெல்லித்தோப்பில் ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்பதையும் திமுக அரசு ரசிக்கிறது. இந்து பக்தர்களுக்கு எதிராக உச்சபட்ச அரசியலை திமுக செய்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கும் பணி…முன் சாத்தியக்கூறுகள் ஆய்வு!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 161-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்திருக்கிறார்கள். சில கோயில்களை நீதிமன்றம் உத்தரவிட்டதால் இடித்தோம் என்கிறார்கள். இடித்து அப்புறப்படுத்துவதற்கு மட்டும் நீதிமன்றம் வேண்டுமாம். தீபத்தூணில் தீபம் ஏற்றுங்கள் என்றால் நீதிமன்றம் வேண்டாமாம். அதேநேரம் இதுவரை எத்தனை, சர்ச், எத்தனை மசூதிகளை இடித்திருக்கிறார்கள்?

ஒரு முதல்வர் போடும் பதிவா இது?

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ………. அரசியலா?” என ஒரு பதிவு போடுகிறார். இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றக்கூடிய தீபத்துக்காக உயிரை கொடுத்து பாஜக தொண்டர்கள் துணை நிற்பார்கள்” என்றார் அண்ணாமலை.

Follow Us