AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் மே 28ல் பக்ரீத் பெருநாள் – தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மே 28ஆம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். மே 17, 2026 இன்று மாலை பிறை தென்படவில்லை. இதனையடுத்து மே 19, 2026 செவ்வாய்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை இஸ்லாமிய முறைப்படி அறிவிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 28ல் பக்ரீத் பெருநாள் – தலைமை காஜி அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 May 2026 22:41 PM IST

சென்னை, மே 17 : தமிழ்நாட்டில் மே 28ஆம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். மே 17, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் தென்படவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை என இஸ்லாமிய முறைப்படி அறிவிப்பு என அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார். ரம்ஜானுக்கு அடுத்து இஸ்லாமியர்கள் மிக சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். கருணை மற்றும் ஈகை ஆகியவை இந்த பண்டிகையின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. இந்த பண்டிகையின் போது பலரும் ஹஜ் பயணமம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ரம்ஜானைப் போலவே பக்ரீத் பண்டிகையையும் இஸ்லாமியர்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இறைதூதர் இப்ராஹிமின் தியாகங்களை நினைவுகூறும் நாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். மேலும் அன்றைய நாளில் கால்நடைகள் பலியிடப்படுவது முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் 10வது நாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்க : 7 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரம்மோற்சவம்….

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம்

அல்லா மீது கொண்ட அசைக்க முடியாத பக்தியின் காரணமாக இப்ராஹிம் தனது மகன் இஸ்மாயிலை பலியிட தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இறை உத்தரவு கிடைக்க தனது மகனுக்கு பதிலாக ஆடு ஒன்றை பலியிட்டதாக கூறப்படுகிறது. தியாகம், கருணை மற்றும் ஈகை ஆகிய நற்பண்புகளை கற்றுத் தரும் பொருட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பக்ரீத் திருநாளில் இஸ்லாமியர்கள் ஆட்டை பலியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதனை 3 பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பகுதியை ஏழைகளுக்கும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பிறர் மீது அவர்கள் காட்டும் அக்கறையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் நன்கொடை வழங்குவது தொண்டுகள் செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டாக பாரக்கின்றனர்.

இதையும் படிக்க : 2026 வைகாசி ராசிபலன்: அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் ராசிகள் எவை?

இஸ்லாமிய நாட்காட்டியின் படி துல்ஹஹ் மாதத்தின் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிறை தென்படுவதன் அடிப்படையில் இந்த பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மே 28, 2026 அன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 17, 2026 இன்று மாலை பிறை தென்படவில்லை. இதனையடுத்து மே 19, 2026 செவ்வாய்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை இஸ்லாமிய முறைப்படி அறிவிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.

Follow Us