AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Eid al-Adha: 2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? – தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் காஜி அலுவலகம் 2025 ஆம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்தத் திருநாளில், சிறப்பு தொழுகைகள், விலங்குப் பலியிடுதல் மற்றும் ஈகை நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும். இது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும்

Eid al-Adha: 2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? – தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
பக்ரீத் பண்டிகை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 May 2025 20:48 PM IST

தமிழ்நாடு, மே28: 2025 ஆம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை (Bakrid Festival 2025) கொண்டாடும் தேதியை தமிழ்நாடு அரசின் காஜி தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 6 ஆம் தேதி இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் இது இஸ்லாமியர்களின் (Islam) தியாகத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய இறை தூதர்களில் ஒருவராக அறியப்படும் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டியில் வரும் துல்ஹஜ் மாதத்தில்தான் பக்ரீத் பண்டிகை வழக்கமாக வரும். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஒன்றாக திருக்குர்ஆன் தெரிவிக்கும் ஹஜ் பயணத்தை இஸ்லாமிய மக்கள் மேற்கொள்வார்கள்.

பக்ரீத் பண்டிகை வரலாறு

இஸ்லாமியர்களின் இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அவருக்கு இறைவன் அருளால் ஒரு ஆண்மகன் இரண்டாவது மனைவி மூலம் பிறந்தது.. அந்தக் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டு இப்ராஹிம் வளர்த்து வந்தார். அந்தக் குழந்தை பால்ய பருவத்தை அடைந்த போது நபிகள் நாயகம் இப்ராஹீமின் பக்தியை சோதிப்பதற்காக இஸ்மாயிலை பலியிட வேண்டும் என கட்டளையிட்டார்.

அதன்படி இறைவனின் கட்டளையை ஏற்ற இப்ராஹிம் தனது மகனிடம் இது பற்றி கூறிவிட்டு அவனின் அனுமதியோடு பலி கொடுக்க துணிந்தார். அந்த நேரத்தில் சிஃப்ரயீல் எனப்படும் வானவரை இறைவன் அனுப்பி வைத்து இந்த நிகழ்வை தடுத்தார். மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுத்து வெளியிடுமாறு இப்ராஹிமுக்கு இறைவன் கட்டளையிட்டார். மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த பக்ரீத் திருநாளில் இஸ்லாமியர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதிகள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து தங்கள் வீட்டில் ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சமபங்குகளாக பிரிப்பார்கள். ஒரு பங்கை பக்கத்து வீட்டார் இருக்கும் நண்பர்களுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள் மற்றொரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்த மகிழ்வார்கள் மூன்றாவது பங்கை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் இதனால்தான் இந்த நாள் ஈகை திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.

துல்கஜ் மாதத்தின் 10 ஆம் நாளில் கொண்டாடப்படும் இந்த பக்ரீத் பண்டிகையில் அதிகாலையில் நடக்கும் தொழுகை தான் மிக முக்கியமான வழிபாடாகும். தொடர்ந்து விலங்குகளை பலிகொடுப்பார்கள். பக்ரீத் நெருங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆட்டுச்சந்தைகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த பலியிடல் நிகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உயிரினங்கள் குறைந்தது ஒரு வயது பூர்த்தி அடைந்ததாகவும், உடல்நல பாதிப்புகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

Follow Us