Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MLA Amulkandasami: அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைவு.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

AIADMK MLA Amulkandasami Passes Away: வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். 60 வயதான அவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். சிகிச்சைக்காக கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரித்தனர். அவரது மறைவுக்கு அதிமுக தலைமை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

MLA Amulkandasami: அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைவு.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!
எடப்பாடி பழனிசாமி - அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமிImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 21 Jun 2025 17:59 PM

கோவை, ஜூன் 21: புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி (T. K. Amulkandasami) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி, அமுல் கந்தசாமி எம்.ஜி.ஆர் மன்றத்தின் துணை செயலாளாராகவும் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அமுல் கந்தசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி போனது.

எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரிப்பு:

முன்னதாக, இன்று அதாவது 2025 ஜூன் 21ம் தேதி கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமியின் உடல் நலத்தை விசாரிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். தொடர்ந்து, நேரில் நலம் விசாரித்தார். இதன்பிறகு, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் உள்ளிட பலரும் நலம் விசாரித்தனர். எடப்பாடி பழனிசாமி பார்த்து சென்ற சில நிமிடங்களிலேயே, அமுல் கந்தசாமி உடல்நலம் மோசமடைய தொடங்கியது.

மருத்துவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி மேற்கொண்டாலும் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடந்து, மதியம் 3.30 மணியளவில் அதிமுக எம்.எல்.ஏ மரணம் அடைந்ததாக அறிவித்தனர். இதனால், அவர்களது குடும்பம் கதறி அழுதனர். தொடர்ந்து, அதிமுக தொண்டர்களும், அப்பகுதி மக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்:

அமுல் கந்தசாமி மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்துள்ளார்.

  • அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
  • கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
  • அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.