AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் பதிவான 5 செ.மீ மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?

Tamilnadu Weather Upadate: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வரும் ஜூன் 27 2025 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பதிவான 5 செ.மீ மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2025 14:26 PM IST

வானிலை நிலவரம்: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 20, 2025 மாலை சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் ஒக்கியம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மடிப்பாக்கம், கண்ணகி நகர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம், சந்தியூர், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்த வெப்பநிலை பதிவான நிலையில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை உஷ்ணத்தை தனித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வரும் ஜூன் 27 2025 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் சென்னையில் குறைவாக பதிவான மழை – பிரதீப் ஜான்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடசென்னை விட தென் சென்னை பகுதியில் மழை பதிவானது குறைவாகவே உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இருப்பினும் தென் சென்னையில் மொத்த ஜூன் மாத அளவை ஒப்பிடுகையில் 100 முதல் 150 மில்லி மீட்டர் வரை வடசென்னை விட குறைவாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் மாதங்களில் சென்னையில் இயல்பான மழை அளவு என்பது 60 மில்லி மீட்டர் வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 20, 2025 தேதியான நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை இருந்ததாகவும் குறிப்பாக தாம்பரம் செங்கல்பட்டு மற்றும் ஈ சி ஆர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பதிவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் ஜூன் 20 2025 அன்று மாலை மழை இருந்தாலும் காலை பகல் நேரங்களில் கடுமையான வெப்பநிலை இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.7 டிகிரி செல்சியஸும், சென்னையில் 39.6 டிகிரி செல்சியஸும், வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியின் 39.1 டிகிரி செல்சியஸும் தூத்துக்குடியில் 39.2 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Follow Us