வாக்குப்பதிவு செய்த ரஜினிகாந்த்.. வாக்களிப்பதற்கு முன்னதாக சொன்ன முக்கிய அட்வைஸ்!
Actor Rajinikanth Cast His Vote | 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், பொதுமக்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை, ஏப்ரல் 23 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) வாக்குப்பதிவு காலை 7 முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார். காலை முதலே திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்து வரும் நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ரஜினிகாந்த் வாக்களித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் வாக்களித்தார். இதேபோல நாதக தலைவர் சீமான், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாக்களித்தனர். இந்த நிலையில் தான், ஆயிரம் விளக்கு தொகுதியில் ரஜினிகாந்த் வாக்களித்துள்ளார்.




இதையும் படிங்க : Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!
ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்த ரஜினிகாந்த்
#WATCH | Tamil Nadu Elections 2026 | Superstar Rajinikanth casts his vote at Stella Maris School, in Chennai. pic.twitter.com/ILfnpfdMRb
— ANI (@ANI) April 23, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலையிலேயே ரஜினிகாந்த் வாக்களித்தார். வாக்களிக்க செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் மிக முக்கியமான உரிமை மற்றும் கடமை ஆகும். வாக்குரிமை இருக்கும் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : வாக்குப்பதிவு நாள்.. இன்று ஒரு பக்கம் வெயில்.. மறுபக்கம் மழை.. உங்க ஊர்ல வானிலை எப்படி இருக்கும்? – முழு விவரம்!
காலை முதலே பொதுமக்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வரும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.