AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தை உலுக்கிய 5 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு 5 மரண தண்டனை.. வரலாற்றுத் தீர்ப்பு!!

அவர் 'குண்டர் சட்டத்தின்' கீழ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

தமிழகத்தை உலுக்கிய 5 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு 5 மரண தண்டனை.. வரலாற்றுத் தீர்ப்பு!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Apr 2026 08:30 AM IST

தமிழிகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிவகாசி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சிவகங்கை போக்சோ (POCSO) நீதிமன்றம் குற்றவாளிக்கு 5 மரண தண்டனைள் மற்றும் 4 ஆயுள் தண்டனைகள் விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்குத் தனித்தனியாக மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது தமிழக சட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ராம்குமார் மரண வழக்கு.. 10 ஆண்டு கால சட்டப் போராட்டம் நிறைவு.. உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

வழக்கின் பின்னணி:

இந்தக் கொடூரச் சம்பவம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (49). தினக்கூலி தொழிலாளியான இவருக்குத் திருமணமான ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சந்திரன், அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுமிகளைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். சிறுமிகள் வீடியோ கேம் விளையாடுவதற்காகத் தனது செல்போனைத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களைத் தனிமைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கடந்த 2023 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 10 வயதிற்கும் குறைவான 5 சிறுமிகளைத் தனது வீட்டிற்கு வரவழைத்துத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனச் சிறுமிகளை மிரட்டியும் வந்துள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை:

பள்ளியில் நடைபெற்ற ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ (Good Touch, Bad Touch) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற சிறுமிகளும் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளைக் கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், 2024 பிப்ரவரி மாதம் திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சந்திரனைக் கைது செய்தனர். அவர் ‘குண்டர் சட்டத்தின்’ கீழ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு:

இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, குற்றவாளி சந்திரனுக்கு நீதிபதி பின்வரும் தண்டனைகளை விதித்தார்.

பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைக்காகத் தலா ஒரு மரண தண்டனை வீதம் மொத்தம் 5 மரண தண்டனைகள். போக்சோ சட்டத்தின் கீழ் இதர குற்றங்களுக்காக 4 ஆயுள் தண்டனைகள். கூடுதலாக 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளின் குடும்பங்களுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் அரசு நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!

சமூகத்தின் வரவேற்பு:

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வரலாற்றிலேயே ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், மிகக் குறுகிய காலத்திலேயே சுமார் 2 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு இத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது, சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow Us