AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொளுத்தும் வெயில்.. உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை..

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். அதிக தண்ணீர், காய்கறிகள் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொளுத்தும் வெயில்.. உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Apr 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், ஏப்ரல் 25, 2026: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 39.9 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 38.6 டிகிரி செல்சியஸ், நாமக்கலில் 39.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 39.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.8 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரையில், மீனம்பாக்கத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை தொடங்கியதிலிருந்து தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஆரம்பமானது கோடை மழை: எந்தெந்த மாவட்டங்களில் ..?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:

இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கிழக்கு உள் கர்நாடகா முதல் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை காணப்படுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 27ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகரிக்கும் வெப்பநிலை:

மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும். உள் தமிழகத்தில் வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

மேலும் படிக்க: இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து.. தந்தை மகன் உயிரிழந்த சோகம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் இருக்கலாம்.

வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை:

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். அதிக தண்ணீர், காய்கறிகள் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us